சினிமா
’ஆல்டர் ஈகோ நான் ரெடி’ ; வந்தது ‘லியோ’ அப்டேட்!
நடிகர் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் மிக முக்கியமான படம் ‘லியோ’. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை அப்படக்குழு அறிவித்துள்ளது. ‘ஆல்டர் ஈகோ நான் ரெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது அன அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.