விஜய் தேவரகொண்டா, சமந்தா இணைந்து நடிக்கும் திரைப்படம் "குஷி". இப்படம் செப்டம்பர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் தயாரிப்பில், சிவ நிர்வானா இயக்கத்தில் உருவாகியுள்ளது "குஷி" திரைப்படம். இந்த படத்தினை தமிழில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனத்தின் என்.வி.பிரசாத் வெளியிடுகின்றனர்.
இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியுள்ளதாவது, குஷி திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகிறது, இந்த படம் கண்டிப்பாக உங்களுக்கு குஷியை கொடுக்கும். மேலும் இந்த படம் உங்கள் முகத்தில் புன்னகையையும், சந்தோசத்தையும் ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். "பெள்ளி சூப்புலு", "அர்ஜூன் ரெட்டி", "கீதா கோவிந்தம்" காலகட்டத்தில் இருந்து நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி என தெரிவித்தார்.
இதையடுத்து படத்தில் வரும் ஹீரோ கேரக்டர் இயக்குநர் மணிரத்னத்தின் ரசிகராக வருவார். "குஷி" படத்தின் இயக்குநர் சிவ நிர்வானாவிற்கு மணிரத்னம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். மணிரத்னம் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்துள்ளார் என்பதை இந்த படத்தின் மூலம் காண்பித்துள்ளார் சிவ நிர்வானா என பேசியுள்ளார் விஜய் தேவரகொண்டா