இயக்குநர் மற்றும் நடிகர் மனோபாலா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இது குறித்து ட்வீட் நடிகர் ரஜினிகாந்த், “பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல இயக்குநர் சீனு ராமசாமியும் “அண்ணன் மனோபாலாவின் மறைவு செய்தியால் உறைந்தேன். எனது இடிமுழக்கம் படப்பிடிப்பில் அவர் இயக்கிய பிள்ளை நிலா வீட்டில் நடந்தது அதில் அவர் நடித்தார். என் மீதும் என் குடும்பத்தார் மீதும் பேரன்பு கொண்டவர். பிறரை வாழ்த்தி மகிழ்பவர். வாழ்த்தக் கூடிய மனம் என்பது இயற்கையின் குணம், அது இன்று இயற்கையோடு கலந்து விட்டது” என ட்வீட் செய்துள்ளார்
நடிகர் கமல் ஹாசன், இசையமைபாகர் இளையராஜா, நடிகர் சத்யராஜ், விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகரராஜ், இயக்குநர் நவீன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது