பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடிகர் சந்தானம், நடிகை தன்யா ஹோப், தம்பி ராமையா, கோவை சரளா, மனோ பாலா என பலர் நடிப்பில் வெளியாகி உள்ள காமெடி படம் ‘கிக்’.
காமெடி படமாக வெளிவந்துள்ள 'கிக்'கிற்கு அர்ஜூன் ஜன்யா என்பவர் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. சுதாகர் ராஜ் என்பவர் சினிமோட்டோகிராப் செய்துள்ளார்.
ஜெயிலர் படத்திற்கு முன்பு வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கிக் வெளியாகி உள்ளது.
ஓடிடியில் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் வெளியாகி உள்ள அதே நாளில் 'கிக்' வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் அனைவரையும் சிரிக்க வைத்ததா? இல்லை சோதித்ததா? என்பது குறித்து பார்க்கலாம்.
சந்தானம் ( சந்தோஷ்) ஒரு விளம்பர கம்பெனி நடத்தி வருகிறார். அதில் பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை பார்த்து பணம் பார்த்து வருகிறார்.இவருக்கு ஆப்போசிட்டாக நேர்மையான முறையில் விளம்பர கம்பெனியை நடத்தி வரும் மனோ பாலாவின் கம்பெனியில் ஹீரோயின் தன்யா ஹோப் வேலை பார்க்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் மோதல், காதல், காமெடி, ரகளை ஆகியவை தான் ’கிக்’ படம்.
தம்பி ராமையா, கோவை சரளா போன்றவர்களுடன் சந்தானம் செய்யும் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. தம்பி ராமையாவுடன் காமெடி டிராக்கில் பல வெரைட்டிகளை செய்துள்ளார்.
டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் அளவுக்கு எல்லாம் காமெடி சரவெடியாக ’கிக்’ இல்லை என்பது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும், காமெடி மற்றும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் நல்ல வந்திருக்கும் என ரசிகர்கள் கருத்தாக உள்ளது.
அதே நேரம் 18 பிளஸ் காமெடிகள் கொஞ்சம் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சந்தானத்தின் இந்த கிக் திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் சிரிக்க வைத்துள்ளது எனலாம்.