சினிமா
ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’
‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகியுள்ள நிலையில், ஜூன் 2ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாடல் ‘கறிக்குழம்பு வாசம்’ நாளை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.