மணிரத்னம் இயக்கத்தில், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜெயம்ரவி, திரிஷா ஆகியோர் நடித்து வெளியான ‘பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் கடந்த ஏப்.28ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, நான்கு நாட்களில் இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ‘வந்தியத்தேவன்’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள கார்த்தி, ஜப்பானிலிருந்து சென்னை வந்து படத்தைக் கண்ட ரசிகர்களை சந்தித்துள்ளார்.
இந்தப் புகைப்படம், சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும், அவர்களுக்கு கார்த்தி பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்திற்கு ஜப்பானில் மாபெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு பின்னர் கார்த்தியைக் காண ஜப்பானிலிருந்து ரசிகர்கள் வந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் விமர்சையாகப் பேசப்பட்டு வருகிறது.