சினிமா
‘கங்குவா’ கொடைக்கானல் படப்பிடிப்பு நிறைவு
கொடைக்கானலில் நடைபெற்று வந்த ‘கங்குவா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது
ரசிகர்கள் மத்தியில பலத்த ஏற்படுத்தியுள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து கொடைக்கானலில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
10 மொழிகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.