சினிமா
விரைவில் ’வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ்!?
கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ஜூன் மாதம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் மிகவும் ரசிக்கப்பட்ட போலீஸ் திரைப்படங்களில் ஒரு திரைப்படம் தான் ‘வேட்டையாடு விளையாடு’. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், கமல் நடித்த இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனையைப் படைத்தது.
'செவெண்ட் சேனல் கம்யூனிகேஷன்' என்கிற நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் எழுத்தாளர் ஜெயமோகனுடன், கௌதம் தற்போது இறங்கியுள்ளார். இந்நிலையில், இந்தத் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் தயாராகி வரும் இப்படக்குழுவினர், இன்னும் சரியான ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.