சினிமா
விவசாயியாக நடிக்கும் கமல்ஹாசன்..!?
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் தற்போது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில்,தற்போது அந்தப் படத்தில் கமல்ஹாசன் ஒரு விவசாயியாக நடிக்கவுள்ளதாகவும், அதற்காக தற்போது விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்குமெனத் தெரிகிறது. மறுபக்கம் கமலின் அடுத்த படமான ’KH234' படத்திற்காக 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்துடன் இணையவுள்ளார்.