சினிமா
டப்பிங் பணிகளை தொடங்கிய கமல் ஹாசன்
இந்தியன் 2 திரைப்படத்திற்கான டப்பிங் பணிகளை கமல் ஹாசன் தொடங்கியுள்ளார்
ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டப்பிங் பணிகளை நடிகர் கமல் ஹாசன் தொடங்கியுள்ளார். அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.