'இந்தியன் 2' படத்தில் பெண் தோற்றத்தில் நடிக்கும் கமல்...சில காட்சிகளுக்காக மெனக்கெடும் ஷங்கர்...

தொழில் நுட்பத்தால் இளமையாகும் கமல்...
Kamalhasan,Shankar
Kamalhasan,Shankar

15 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக பெண் வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.1996-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வயதான பெண் வேடத்தில் நடித்திருப்பார். அவரது அந்த கதாபாத்திரமும், நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு வெளியானது ‘தசாவதாரம்’. இந்தப் படத்தில் 10 வெவ்வேறு கெட்டப்பில் வரும் கமல் கிருஷ்ணவேணி பாட்டி கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டிருப்பார். இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்துக்காக அவர் மீண்டும் பெண் வேடமிட்டு நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kamalhasan,Shankar
Kamalhasan,Shankar

இந்தப் படம் முடித்தப் பின்பு கமல்ஹாசன் ‘கல்கி 2989 ஏடி’, வினோத்துடன் 'KH 233', மணிரத்னமுடன் 'KH 234' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.' இந்தியன் 2' படத்துக்காக படத்தின் முக்கியமான காட்சி ஒன்றுக்காக சிறிது நேரமே நீடிக்கும் பெண் தோற்றத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com