சினிமா
காஜலின் 60ஆவது திரைப்படம்!
காஜலின் 60ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை காஜல் அகர்வால் நடிக்கும் அடுத்த திரைப்படமான ‘காஜல் 60’ குறித்த அப்டேட் நாளை வெளியாகுமென அப்படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தப் படம் டைட்டில் குறித்த அறிவிப்பாக ஒரு கிளிம்ஸ் வீடியோ வெளியாகுமெனத் தெரிகிறது. இந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார் என்றும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் எதுவும் தற்போது வெளியாகவில்லை. ஆனால், இது ஒரு கதாநாயகி முதன்மை கதாபாத்திரமாகக் கொண்ட திரைப்படம் என்பது மட்டும் தெரிகிறது. கடைசியாக தமிழில் வெளியான ‘கருங்காப்பியம்’ எனும் படத்தில் காஜல் ஆர்வால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.