சினிமா
தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜிகர்தண்டா 2’
‘ஜிகர்தண்டா 2’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’. இத்திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இப்படியிருக்க இத்திரைப்படத்தின் வெளியீடு தேதியுடன் கூடிய புதிய டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் இத்திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.