'ஜெயிலர்' படத்தினை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள 'தலைவர் 170' படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் ''ஜெயிலர்''. ரஜினியின் 'ஜெயிலர்' பட டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை போல் இதிலும் டார்க் காமெடியுடன் ஆக்ஷன் கலந்து இயக்கியுள்ளார் நெல்சன். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஜெயிலர்' படத்தினை தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள 'தலைவர் 170' படத்தினை த.செ. ஞானவேல் இயக்கவுள்ளார்.சூர்யா நடிப்பில், த.செ. ஞானவேல் இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் ரிலீசான இந்தப்படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை குவித்த நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதான வரவேற்பினை பெற்றது. இருளர் பழங்குடியினர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் இந்த சமுதாயத்தில் நடத்தப்படும் விதம் குறித்தும் அழுத்தமாக பதிவு செய்து 'ஜெய் பீம்' படம் மூலம் கவனம் ஈர்த்தார் த.செ. ஞானவேல். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது ரஜினி, த.செ. ஞானவேல் கூட்டணி அமைந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. தாடியை ட்ரிம் செய்து அட்டகாசமான புதிய தோற்றத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து 'தலைவர் 170' படத்திற்கான லுக் இதுதானா எனக்கேட்டு ரசிகர்கள் ஆர்வமுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்தப்படத்தில் ரஜினி இஸ்லாமியராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'தலைவர் 170' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதே போல் பிரபல தெலுங்கு நடிகரான நானியும் இந்தப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெயிலர்'' படம் ரிலீஸை தொடர்ந்து ''தலைவர் 170'' படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.