சினிமா
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஜெயம் ரவி
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் ஜெயம் ரவி ஒப்பந்தமாகி வருகிறார். பொன்னியின் செல்வன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹெட் ஆனாலும் அவர் கடைசியாக நடித்த ’பூமி’, ‘ அகிலன்’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்தையே பெற்றது.
இப்படியிருக்க ஜெயம் ரவி பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது