இயக்குநர் அட்லீ முதன் முதலில் பாலிவுட் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் முதல் பாலிவுட் படத்திலேயே பிரபல நடிகர் ஷாருக் கானை வைத்து இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்திருந்தாலும், இந்திக்கு "ஜவான்" திரைப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் நயன்தாரா. இசையமைப்பாளர் அனிருத் அவரும் பாலிவுட்டுக்கு முதன் முதலாக மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படி முதல் என்ட்ரி என்று பாலிவுட்டுக்குள் நுழைந்திருக்கும் மூன்று திரை பிரபலங்கள். எப்போதும் போல் அட்லீயின் கமர்ஷியல் ஜானரில் படம் எடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்காது. இசை பற்றி சொல்லவே தேவையில்லை. அனிருத் அவருக்கான பாணியில் சிறப்பாகவே அவரது வேலையை செய்துள்ளார். நிச்சயமாக ஷாருக் ரசிகர்களுக்காக ஒரு ட்ரீட் கொடுத்த திரைப்படம் தான் "ஜவான்" என்றே சொல்லலாம்.
"ஜவான்" படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கட்சிதமாய் பொருந்தி போகியுள்ளனர். படத்தின் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் "ஜவான்" திரைப்படத்தின் விமர்சனத்தை முழுமையாக காண, Click Here