ஷாருக்கான், அட்லி, அனிருத் கூட்டணியில் வெளியாகி உள்ள ஜவான் படத்தின் ராமையா வஸ்தாவையா பாடலின் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஜவான் திரைப்படம் செப்.7ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் Not ராமையா வஸ்தாவையா பாடலின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே அனிருத் இசையமைத்த ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ’ஜவான்’ படத்தின் இசையும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வருகிறது.
’ஜவான்’ படத்தை இயக்குநர் அட்லியுடன் இணைந்து ஷாருக்கான் ஏற்கனவே பார்த்தார். இந்த படம் தொடர்பாக ட்விட்டர்( எக்ஸ்) தளத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு ஷாருக்கான் அழைப்பு விடுத்திருந்தார். அதில் ரசிகர்கள் சூட்டிங், பாடல், படத்தின் கதை, உடல்நலம் உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.அப்போது ரசிகர் ஒருவர், நான் உங்களை ஜவான்(Jawan) silent என அழைக்கலாமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ஷாருக்கான், நான் உங்களை Love என்று பதில் ட்வீட் செய்தார்.
இந்த நிலையில், ஜவான் படத்தின் ஓவ்வொரு பாடலும் ஷாருக்கான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், இன்று ( ஆக28ம்)தேதி ராமையா வஸ்தாவையா என்ற பாடலின் டீசர் வெளியாகி உள்ளது. முழு பாடல் நாளை வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகி உள்ள நிலையில், பாடலுக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.