சினிமா
ஜப்பானுடன் மோதும் ‘சந்திரமுகி 2’
ஜப்பான் திரைப்படமும், சந்திரமுகி 2 திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதேபோல் ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படியிருக்க இவ்விரு திரைப்படங்களும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை குறிவைத்து இன்னும் சில படங்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.