சினிமா
இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘ஜப்பான்’!
நடிகர் கார்த்தி நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் ‘கார்த்தி’ நடிக்கும் படம் ‘ஜப்பான்’. இந்தப் படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு அப்படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹெய்ஸ்ட் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ்நாட்டில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ‘திருவாரூர்’ முருகனின் கதை என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. மேலும், இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா -2’ ஆகிய படங்களோடு வசூலில் மோதவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.