சினிமா
மே 25 வெளியாகும் ‘ஜப்பான்’ கிளிம்ப்ஸ்
‘ஜப்பான்’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் மே 25ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. ’பொன்னியின் செல்வன் 1’, ’சர்தார்’, ’பொன்னியின் செல்வன் 2’ என ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ள கார்த்தி நடிக்கும் 25ஆவது படமாக ஜப்பான் அமைகிறது.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் கார்த்தி மே 25ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘ஜப்பான்’ கிளிம்ப்ஸ்-ஐ வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.