ஜெயிலர் சக்சஸ் மீட்: ”ரஜினி சாரும், ரசிகர்களால் தான் இந்த வெற்றி” - இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சி

ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்துள்ளதாக சூப்பர் ஸ்டார் கூறினார்
ஜெயிலர் சக்சஸ் மீட்டில் இயக்குநர் நெல்சன்
ஜெயிலர் சக்சஸ் மீட்டில் இயக்குநர் நெல்சன்

’ஜெயிலர்’ படம் நடிகர் ரஜினி சாரின் சப்போர்ட்டும், ரசிகர்களின் ஆதரவுமே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் என ஜெயிலர் சக்சஸ் மீட்டில் இயக்குநர் நெல்சன் நெகிழ்ச்சியோடு பேசினார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஒரு வாரத்தில் ரூ.375 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படம் வெளியாகி முதல் வாரத்தில் அதிகம் வசூலித்த படமாக ஜெயிலர் பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படம் கமிட் ஆனது முதல் நெல்சன் மீதான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதற்கு காரணம் இதற்கு முன் அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம்தான். இதுகுறித்து ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது வைரலானது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் பலரும் நெல்சனை வாழ்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் சக்சஸ் மீட்டிங் சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் நெல்சன், நடிகர்கள் வசந்த் ரவி, ரெடிங் கிங்ஸ்லி, நடிகை மிர்ணா மேனன், பாடலாசிரியர் சூப்பர் சுப்பு உட்பட ஜெயிலர் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ஜெயிலர் படம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த் குறித்து இயக்குநர் நெல்சன் மனம் திறந்துள்ளார்.

அதில், ஜெயிலர் படம் தொடங்கியது முதல் இறுதி வரை தனக்கு உறுதுணையாக ரஜினிகாந்த் சார் தான் பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.

மேலும் அவரின் பவர் ஃபுல்லான ஆக்டிங் தான் ஜெயிலர் வெற்றிக்கு முதல் காரணம். அதன்பிறகு சொல்ல வேண்டும் என்றால் ரசிகர்களால் தான் இந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. படத்தை பார்த்துவிட்டு நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வந்துள்ளதாக சூப்பர் ஸ்டார் கூறினார். அதுவே எனக்கு முதல் நன்னம்பிக்கையாக இருந்தது. பட்ஜெட் விஷயத்தை எடுத்துக்கொண்டால் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் சன் பிக்சர்ஸ் உதவியாக இருந்தனர். ஜெயிலர் பட கதையை கேட்டுவிட்டு 5 மணி நேரம் ஆனாலும் இடத்தை விட்டு கலாநிதிமாறன் நகரவில்லை என ஜாலியாக குறிப்பிட்டு பேசினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com