ஜெயிலர் ரஜினியின் மருமகள்- நடிகை மிர்ணாமேனன் நெகிழ்ச்சி

ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்துள்ள மிர்ணாமேனன், படத்திற்கும், தனது கதாபாத்திற்கும் ரசிகர்கள் தரும் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை மிர்ணாமேனன்
நடிகை மிர்ணாமேனன்

ஜெயிலர் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை நடிகை மிர்ணா பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்களுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லாலுடன் ’பிக் பிரதர்’ எனும் மலையாளப் படத்தில் முதல்முறையாக நடிகை மிர்ணாமேனன் அறிமுகம் ஆனார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்த ’புர்கா’ எனும் திரைப்படத்தில் நஜ்மா எனும் கதாபாத்திரம் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் ’அனந்தம்’ எனும் இணைத்தொடரிலும் நடித்துள்ளார்.

மிர்ணாமேனன் ’ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக ஸ்வேதா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், மிர்ணாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும், “உங்களை பொண்ணு கேட்டு வரவா எனவும், பெரிய டைனோஸர் பார்த்தா மட்டும்தான் பயம்.மத்தபடி ஐ லவ் யூ” எனவும் பலரும் இணையதளங்களில் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை மிர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜெயிலர் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்களுக்கும், நடிகர் ரஜினிகாந்திற்கும், இயக்குநர் நெல்சனுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படத்தில் நடித்துள்ள அனைவரின் கதாபாத்திரங்களும் பேசப்பட்டு வரும் நிலையில், மருமகளாக நடித்துள்ள மிர்ணாவுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com