மலையாளத்தில் வெளிவரும் 'ஜெயிலர்' பட இயக்குனர் ஷகிர் மாடத்தில் வீட்டையும், நகைகளையும் அடமானம் வைத்து படம் எடுத்திருப்பதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடலான 'காவாலா' பாடல் கடந்த மூன்று வாரங்களாக ரசிகர்களை தள்ளாட வைத்துள்ளது. அடுத்து இரண்டாவது சிங்கிள் பாடலான ஹுக்கும்' பாடல் சூப்பர் ஸ்டார் பதவிக்கு போட்டி போடுகிறவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இருந்தது. தற்போது மூன்றாவது சிங்கிள் பாடலான 'ஜுஜுபி' பாடல் தலைவன் நான் ஒருவன் தான் என்ற பாடல் வரிகளில் விஜய்யை வம்பிழுக்கிறாரா ரஜினி என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் வரும் பாடல்கள் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ரஜினி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில்,இதே பெயரில் இயக்குனர் ஷகிர் இயக்கத்தில் மலையாளத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படமும் கேரளாவில் வெளியாகிறது. இந்நிலையில் இயக்குனர் ஷகிர் நீதி மன்றத்தில் கேரளாவில் மட்டும் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் தலைப்பை மற்ற கோரி வழக்கு பதிவு செய்திருக்கிறார். தற்போது தலைப்பு தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இதுத்தொடர்பாக மேலும் ஷகிர் கூறியிருப்பதாவது;021ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கேரளத் திரைப்பட சங்கத்தில் 'ஜெயிலர்' தலைப்பைப் பதிவு செய்தேன். ரஜினியின் ஜெயிலர் தலைப்பு 2022ம் ஆண்டு மே மாதம்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரஜினி படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதினேன்.'ஜெயிலர்' படத்தின் தலைப்பை ஒட்டுமொத்தமாக நான் மாற்றச்சொல்லவில்லை. கேரளாவில் மட்டும் படத்தின் தலைப்பை மாற்றி வெளியிடும்படி தான் கோரிக்கை வைத்தேன்.நான் இந்தப் படத்தின் இயக்குநர் மட்டுமல்ல. படத்தையும் தயாரிக்கிறேன். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு 5 கோடி ரூபாய் செலவானது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியான பிறகு எனது படம் வெளியானால் யார் பார்ப்பார்கள் என்று விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள். அதோடு படத்தில் மோகன்லாலும் நடித்துள்ளார். அதனால்தான், ரஜினியின் 'ஜெயிலர்' வெளியாகும் அதேநாளில் எங்கள் படத்தையும் வெளியிட முடிவெடுத்தோம்.
இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு 5 கோடி ரூபாய் செலவானது. எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வங்கியில் லோன் போட்டு கடன் வாங்கியுள்ளதோடு வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். வட்டி கட்டவே சிரமமாக உள்ளது. எனது எதிர்காலமே 'ஜெயிலர்' படத்தில்தான் அடங்கியிருகிறது. சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் கூட ஏற்பட்டிருகிறது.இப்போதும் நான் கேட்பது மலையாளத்தில் மட்டும் தலைப்பை மாற்றுங்கள் என்றுதான். இவ்வாறு மலையாள 'ஜெயிலர்' பட இயக்குனர் ஷகிர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.