Jailer
சினிமா
ஜூன் 21 வெளியாகும் ‘ஜெயிலர்’ முதல் சிங்கிள்
ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் ஜூன் 21ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது
நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இத்திரைப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா உள்ளிட்ட உச்சநட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படியிருக்க இத்திரைப்படத்தின் முதல் பாடல் இயக்குநர் நெல்சனின் பிறந்தநாளன்று (ஜூன் 21) வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.