‘நல்ல வேலை ஜவானில் விஜய் நடிக்கல’-கேபிள் சங்கர்

கடந்த வாரம் 8 படங்கள் வெளியாகி உள்ளது. இதில் விமர்சன ரீதியில் தமிழ் குடிமகன், நூடுல்ஸ் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்

நல்ல வேலை ஜவான் கதையில் விஜய் நடிக்கல. பல படங்களின் கதைதான் ஜவான் என இயக்குநரும், சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் அனிருத் இசையில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகி பாபு, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ஜவான். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

முன்பதிவின் போதே வரவேற்பை பெற்ற ஜவான் முதல் நாளில் ரூ.129 கோடியே 60 லட்சம் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜவான், தமிழ்குடிமகன், நூடுல்ஸ் போன்ற படங்கள் குறித்து இயக்குநர் மற்றும் சினிமா விமர்சகர் கேபிள் சங்கர் நமது குமுதம் யூடியூப் சேனலுக்கு பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிரிந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜவான் திரைப்படம் என்பது அட்லியின் வழக்கமான பல படங்களை போன்றே உள்ளது. அவரின் படங்களையே உல்டாவா பண்ணி வச்சிருக்காரு. படத்தை பார்க்கும் போது சீன்களை பார்ப்பவர்களுக்கும், கதையை எழுதியவருக்கும் அது எந்த படத்தின் சீன்கள் என்பது தெரியும். அதில் சுவாஸ்யம் என்னவென்றால் படத்தின் சீன்கள் இது எந்த படத்தோடு சீன் என நம்மை ஒரு ஈடுபாட்டோடு யோசிக்க வைப்பது தான். ஜவான் படமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. டெக்னிக்கல பார்த்தா நல்லா இருக்கு. ஆனால் கதையாக பார்த்தால் ஏற்கனவே சொல்லப்பட்ட கதை தான். அதில் நாம புதுச என்னத்த சொல்றோம் அப்படிங்கிறது தான் விஷயமே.இந்த உலகில் புதிதான கதை என்று ஒன்று இல்லை. ஏற்கனவே இருக்கிற தோசையை மாற்றி போடுவது தான். அதில் பல கடைகளில் இருந்து தோசை மாவை வாங்கி சுட்டால் தோசை எப்படி இருக்குமோ அது தான் ஜவான்.

மீம்கள் நல்ல படத்திற்கும் வரும், நல்லா இல்லாத படத்திற்கும் வரும். ஆகையால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. 4 ஆண்டுகளாக அட்லி இந்த கதையைத்தான் எடுத்தாரா என்றால் இதை நம்பி ரூ.400, 500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளரும், ஹீரோவும் இந்த கதை வெற்றி பெறும் என நம்புகிறார்கள்.ஆகையால் இதை படமாக எடுத்துள்ளார் அட்லி.

ஜவானில் நிறைய விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. ஆனால் மனதிற்கு நெருக்கமாக இருக்கும் அளவிற்கு இல்லை. தென் இந்தியாவில் ஜவான் பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் தெரியவில்லை. ஆனால் வட இந்திய ரசிகர்களுக்கு புதுச இருக்க வாய்ப்பு உள்ளது.

நல்ல வேலை ஜவான் கதையில் விஜய் நடிக்கவில்லை. ஜவானை மெர்சல்2 என சொல்வதை ஏற்க முடியாது. ஏனென்றால் மெர்சலே 2 படங்களின் கதை.கடந்த வாரம் 8 படங்கள் வெளியாகி உள்ளது. இதில் விமர்சன ரீதியில் தமிழ் குடிமகன், நூடுல்ஸ் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாம் அதை பற்றி பேசுவதில்லை.ஆனால் பல கோடி ரூபாய் முதலீடு, ஷாருக்கான் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை இன்னும் பல கோடி ரூபாய் வியாபாரம் செய்வதற்கான வேலையை தான் நாம் செய்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு நல்ல படத்தை புரொமோஷன் செய்வதற்கான வேலையை நாம் யாரும் செய்வதில்லை.

ஜவானை பற்றி கேட்காமல் நூடுல்ஸ் படம் பற்றி கேட்டீர்கள் என்றால் இதை பார்க்கும் யூடியூப் ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்த வரையில் இந்த வாரம் வந்த படங்களில் தமிழ்குடிமகன், நூடுல்ஸ், ரெட் சாண்டல் உட் (Red Sandal Wood ) சிறந்த படங்கள். போன வாரம் வந்த லக்கி மேன், பரம்பொருள் போன்றவை நல்ல இருக்கு. நல்ல படங்கள் நிறைய இருக்கு. எதற்கு ஜவானை பற்றி பேசி நம்முடைய நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பல்வேறு சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார். முழு வீடியோவை காண கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

https://youtu.be/RxVtbuQY15A?si=fDf6_jRzYIBHXcA0

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com