சினிமா
மாவீரனுடன் மோதும் இறைவன்?
மாவீரன் மற்றும் இறைவன் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் ‘இறைவன்’. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படமும் ஜூலை வெளியாகலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இரு படங்களும் ஜூலை 14ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தையும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.