குமுதம் யூட்யூப் சேனலுக்கு பத்திரிகையாளர் செய்யாறு பாலு கொடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "லண்டனில் லியோ படத்திற்கு கிட்டதட்ட 10 ஆயிரம் டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளது. அதிலும் திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில் லியோ படத்திற்கான ஹைப் எகிறிக்கொண்டே செல்கிறது. குறிப்பாக 30 ஆயிரம் டிக்கெட்டுகள் Sold Out என்று அறிவிப்பு பலகையே வைத்துவிட்டார்கள்.
இந்திய சினிமா வரலாற்றிலே ஒரு படத்திற்கு அதுவும் 6 வாரத்திற்கு முன்பே வெளிநாட்டில் பெரிய ஹைப்-ஐ உருவாக்கியுள்ளது லியோ திரைப்படம். வெளிநாட்டில் மட்டுமல்ல கேரளாவிலும் ஏகபோகமான வரவேற்பு காத்து கொண்டிருக்கிறது லியோ திரைப்படத்திற்கு. பெண்களுக்கு மட்டும் பிரத்யேக காட்சியான ஸ்பெஷல் ஷோ 7 காட்சிகள் திரையிடப்படவுள்ளது" என்று பேசியுள்ளார்.
முழு வீடியோவையும் பார்க்க: Click Here