'லியோ' படத்தில் விஜய் ஹீரோவா? சைட் ஆக்டரா? கேள்விகளை எழுப்பும் நெட்டிசன்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் "லியோ" படத்தில் விஜய் ஹீரோவா அல்லது சைட் ஆக்டரா என்ற கேள்வி அம்புகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது
லோகேஷ் கனகராஜ், விஜய்
லோகேஷ் கனகராஜ், விஜய்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் "லியோ". நடிகர் விஜய்யுடன் லோகஷ் இணையும் இரண்டாவது படம் இது. "மாநகரம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இயக்கிய "கைதி" படம் பெரும் வெற்றி பெற்றது. கைதியை தொடர்ந்து விஜய் நடிப்பில் "மாஸ்டர்" படத்தை இயக்கினார் லோகேஷ்.

சஞ்சய் தத்
சஞ்சய் தத்

"விக்ரம்" திரைப்படத்தின் மூலம் 'லோகேஷ் சினிமேட்டிக் யூனிவெர்ஸ்' (LCU) என்ற புது பரிமாணத்தில் லோகேஷ் கனகராஜ் பெரிதும் பாராட்டப்பட்டார். கமல் ஹாசனுக்கு அந்த படம் மாஸ் கம்பேக் ஆக இருந்தது என்று பலரும் லோகேஷை புகழ்ந்தனர். "விக்ரம்" திரைப்படம் பெரும் ஹிட் அடித்தது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அதை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் விஜய் மட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், ஜாஃபர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

விஜய், சஞ்சய் தத்
விஜய், சஞ்சய் தத்

மேலும் பல கதாபாத்திரங்கள் வெளியில் தெரியப்படுத்தாமல் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. "லியோ" அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு முன்பே அறிவித்திருந்தது. படம் வெளியாகும் போது தான் அனைத்து சர்ப்ரைஸ்களும் உடையும். "விக்ரம்" படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்தது போல் "லியோ" திரைப்படத்திலும் அதேபோல் ஒரு சிறப்பு தோற்றம் உள்ளது அதுவும் சஸ்பென்ஸ் என்று பலரால் செய்திகள் வெளியிடப்படுகிறது. "லியோ" படத்தில் நடித்துள்ளவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பதால் நடிகர் விஜய் படத்தில் 'ஹீரோவா அல்லது சைட் ஆக்டரா' என்று இணையத்தில் ரசிகர்கள் தொடங்கி பலரும் விமர்சித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com