சினிமா
"லியோ படத்தில் நான் இல்லை": விஜய் சேதுபதி
லியோ திரைப்படத்தில் தான் இல்லை என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘லியோ’. படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. இதில் கவுதம் மேனன், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின் என பல உச்சநட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படியிருக்க இதில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு விஜய் சேதுபதியே பதிலளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், லியோ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.