நடிகர் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி நடைப்போட்டு கொண்டிருக்கும் "ஜெயிலர்" திரைப்படம், வெளியாகி சில நாட்களிலேயே பல கோடி வசூல் பெற்றதாக சொல்லப்படுகிறது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இமயமலை பயணத்தை மேற்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்.
இதற்கிடையில் இமயமலை சென்று திரும்பிய பின் வட இந்தியாவில் முக்கியமான அரசியல் தலைவர்கள் சிலரை சந்தித்து உரையாற்றினார். அது மட்டுமல்லாமல் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினி ஆசிர்வாதம் வாங்கியது தான் பெரும் பேசு பொருளாகவும், சர்ச்சையாகவும் உள்ளது.
இது குறித்து சினிமா விமர்சகர் பிஸ்மி குமுதம் யூட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். ரஜினி மட்டும் "ஜெயிலர்" படம் வெளியாவதற்கு முன்பு யோகி காலில் விழுந்திருந்தால் படம் அட்டர் ஃபிளாப் ஆகியிருக்கும் என்று கூறுகிறார் பிஸ்மி.
மேலும் முழு வீடியோவை பார்க்க: Click Here