'விளம்பர படத்தில் நடிப்பதற்கே ரொம்ப கஷ்டபட்டேன்'- சரஸ்வதி மேனன்

நான் விளம்பரத்தில் நடிப்பதற்கே மிகவும் சிரமபட்டேன், உங்கள் ஃபேஸ் செட் ஆகவில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
சரஸ்வதி மேனன்
சரஸ்வதி மேனன்

பிரபல திரைப்பட இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன். தமிழ் திரையுலகிற்கு நடிகையாக சமீபத்தில் வெளியான "அஸ்வின்ஸ்" படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவரது முதல் தமிழ் திரைப்படம் அதுவே. நடிகர் வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "அஸ்வின்ஸ்" படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ராஜீவ் மேனன், சரஸ்வதி மேனன்
ராஜீவ் மேனன், சரஸ்வதி மேனன்

இயக்குநர் ரவி தேஜா இயக்கத்தில் வெளியான "அஸ்வின்ஸ்" படம் திரில்லர் ஜானர் கொண்டது. சரஸ்வதி மேனன் அவரது தந்தை கடைசியாக இயக்கி வெளியான "சர்வம் தாள மயம்" படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். சரஸ்வதி மேனன் நடிகை மட்டுமல்ல நல்ல பாடகர், நடனமாடக்கூடியவர், எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்தன்மைகளை கொண்டவராக வளம் வருகிறார்.

இந்நிலையில், சரஸ்வதி மேனன் ஒரு விளம்பர ஷூட்டிங் போயிருந்தபோது உங்களை பார்த்தால் சில நேரங்களில் வட இந்திய பெண் போல் இருக்கிறது, சில நேரங்களில் தென் இந்திய பெண் போல் இருக்கிறது என்று சொல்வார்கள், உங்கள் ஃபேஸ் செட் ஆகவில்லை என்று சொல்வார்கள். விளம்பர படத்தில் நடிப்பதற்கே ரொம்பவும் சிரமபட்டேன் என குமுதம் யூட்யூப் சேனலில் கொடுத்த இன்டர்வியூவில் பேசியுள்ளார்.

அந்த வீடியோவை முழுமையாக பார்க்க: Click Here

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com