‘ஐ லவ்யூ ஆல்’- விஜய் ஆண்டனி மகளின் உருக்கமான கடிதம்

திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளியில் உடன் படித்த தோழிகள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜய் ஆண்டனி, அவரது மகள்
விஜய் ஆண்டனி, அவரது மகள்

’மிஸ் யூ ஆல்’ என விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த ஒரு வருடமாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மன அழுத்தம் காரணமாக இன்று அதிகாலை தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

காலையில் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மீராவின் உடலை மீட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது இல்லத்தில் மீராவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளியில் உடன் படித்த தோழிகள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விசாரணையின்போது மீரா எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், ’ஐ லவ்யூ ஆல். மிஸ் யூ ஆல்’ என்று எழுதி உள்ளார். மேலும் 10 வரிகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கடிதம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com