சினிமா
'திரிஷா எனக்கு ரொம்ப பிடிக்கும்' - நடிகை வசுந்தரா காஷ்யப்
திரிஷா எனக்கு பிடித்தமான நபர், மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளார் என்று நடிகை வசுந்தரா காஷ்யப் கூறியுள்ளார்
"தென்மேற்கு பருவாற்று" திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்திருப்பார் நடிகை வசுந்தரா காஷ்யப். "பேராண்மை" படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்திருப்பார். இவருடைய கதை தேர்வு, தனித்துவமான நடிப்பு பலரையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில் குமுதம் யூட்யூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளார். அதில், "தமிழ் பெண்கள் ஹீரோயினாக வேண்டும் என்று டிமெண்ட் செய்தால் இல்லை என்றா சொல்ல போகிறார்கள். பிரியா ஆனந்த் இல்லையா, திரிஷா இருக்கிறார். திரிஷா எனக்கு ரொம்பவும் பிடித்தமான ஒரு நபர், அவர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளார்" என்று பேசினார் வசுந்தரா காஷ்யப்
வீடியோவை பார்க்க: Click Here