அவமானப்பட்ட தனுஷ்..பதிலடி கொடுத்த சிறுமி...தனுஷ் போட்ட முதல் ஆட்டோகிராஃப்..!

இவரெல்லாம் ஒரு ஹீரோவா ?
அவமானப்பட்ட தனுஷ்
அவமானப்பட்ட தனுஷ்

தமிழ் மட்டுமல்லாது பல மொழிகளில் பிஸியான நடிகராக வலம் வருகின்றார் தனுஷ்.தமிழ் சினிமாவில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் தனுஷ்.இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என ஒரு ஆல்ரவுண்டராக வலம் வருகின்றார். தற்போது நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்த முடித்துள்ளார். தனுஷின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகின்றார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது.மேலும் ஒரு தெலுங்கு படத்திலும், பாலிவுட் படத்திலும் தனுஷ் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் 40 வது பிறந்தநாள் வரவுள்ள நிலையில் இணையத்தளத்தில் தனுஷின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. 'காதல் கொண்டேன்' படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த போது இயக்குனரிடம் இப்படத்தில் ஹீரோ யார் என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார் அதற்க்கு இவர் தான் ஹீரோ என்று காண்பித்தார் இயக்குநர்.அந்த ரசிகர் இவரெல்லாம் ஒரு ஹீரோவா என்று கேட்டதும் அருகிலிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.எனக்கு அவமானமாக இருந்தது. என்ன செய்வது,எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

அந்த சமயத்தில் ஒரு சிறுமி என்னிடம் ஓடிவந்து, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும், எனக்கு ஒரு ஆட்டோகிராப் போட்டுக்கொடுங்க என கேட்டார்.என் வாழ்க்கையில் நான் போட்ட முதல் ஆட்டோகிராஃப் அது தான், அவமானப்பட்டு நின்ற என்னை அந்த சிறுமி தான் பெருமைப்பட செய்தார் என தனுஷ் மிகவும் எமோஷனலாக கூறியுள்ளார்.தற்போது அந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று நடித்துக்கொண்டிருக்கிறார்.நடிப்பின் அசுரன் என்று ரசிகர்களிடம் பட்டம் வாங்கியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com