சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள‘ஜெயிலர்’ படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்துவருகிறார்கள்.
இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.இதற்கான 1000 இலவச டிக்கெட்டுகளை குறிப்பிட்ட லிங்கில் பெறலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.15 வினாடிகளில் அனைத்து டிக்கெட்களும் காலியானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
'ஜெயிலர்' படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 49 நிமிடம். முதல் பாதி 1 மணி நேரம் 19 நிமிடங்கள், இரண்டாம் பாதி 1 மணி நேரம் 30 நிமிடங்கள் ஓடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. 'ஜெயிலர்' ரசிகர்களின் மனதை சிறைப்பிடிப்பாரா ? ரசிகர்களின் பொறுமையை சோதிப்பாரா ? பொறுத்திருந்து பார்க்கலாம்.