ஶ்ரீதர்.K இயக்கத்தில், “பாராசூட்” சீரிஸை ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது.
நடிகர் கிருஷ்ணா தயாரிப்பு நிறுவனமான ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. நடிகர் கிருஷ்ணா டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்காக தயாரிக்கும் இரண்டாவது சீரிஸ் இதுவாகும்.
நடிகர் ஷாம், நடிகர் கிஷோர் மற்றும் நடிகை கனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த மூவருடன், குழந்தை நட்சத்திரங்களான சக்தி மற்றும் இயல் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்களுடன், பிரபல நடிகர்கள் VTV கணேஷ், பவா செல்லதுரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார். கலை இயக்குநராக ரெமியன் பணியாற்ற, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை அமைக்கவுள்ளார்.