பாலய்யாவுக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்!

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK108' படத்தில் ஹிந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால் நடிக்கவிருப்பதாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலய்யாவுக்கு வில்லனாகும் ஹிந்தி நடிகர்!

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் பெயரிடப்படாத ‘NBK108' படத்தில், ‘ரா-ஒன்’ , ‘ஓம் சாந்தி ஓம்’ போன்ற படங்களில் நடித்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு பேர் போன அர்ஜூன் ராம்பால் நடிக்கிறார் என அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தின் இயகுநர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இந்தப் படம் ஹிந்தி நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு முதல் தெலுங்கு படமாகும். இந்தப் படத்தில் பாலய்யாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

தமன் இசையமைக்க, ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் தசரா பண்டிகைக்கு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடைசியாக பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ படத்தோடு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com