இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ‘சூர்யா 43’ என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடைசியாக ஜி.வி.பிரகாஷ் இசையில் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ என்கிற படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2006இல் வெளியான ‘வெயில்’ படத்தில் தான் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்நிலையில், அவரது 100ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. இதில் நடிக்கவிருக்கும் ஏனைய நடிகர்கள் குறித்த தகவல் எதுவும் தற்போதைய வரை வெளியாகவில்லை. அடுத்தடுத்த நாட்களில் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் அப்படக்குழுவால் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.