சினிமா
‘SK 21’ படக்குழுவில் இணைந்த ஜீ.வி.பிரகாஷ்
சிவகார்த்திகேயனின் ‘SK 21’ திரைப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் திரைப்படம் ‘SK 21’. இத்திரைப்படத்தில் சாய் பல்லவியுடன் முதன்முறையாக சிவகார்த்திகேயன் ஜோடி சேர்கிறார். ‘மாவீரன்’ மற்றும் ‘அயலான்’ பணிகளில் பிசியாக இருந்த சிவகார்த்திகேயன் தற்போது ‘SK 21’ திரைப்படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார்.
இப்படியிருக்க, இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் இசையில் நடிக்கவுள்ளார். மேலும், இத்திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.