"திட்டம் இரண்டு" படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ளது "அடியே" திரைப்படம். இப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை கௌரி கிஷன் நடித்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வந்தபோது பெரிதும் பேசப்பட்டது. இதுவரை நடந்திடாத ஒரு விஷயத்தை நடந்தால் எப்படி இருக்கும் என்பது போல் காண்பித்திருந்தார்கள். அந்த ஐடியா நன்றாக இருக்கிறது என்று பலரும் பாராட்டினார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இந்த கதையை தேர்வு செய்ததற்கே வாழ்த்தலாம். சைன்ஸ் ஃபிக்சன் என்று சொல்லிவிட முடியாது இருந்தாலும் லவ் டிராமா அதை வைத்து தான் திரைப்படம் நகர்கிறது. இறந்துவிடலாம் என்ற எண்ணம் வரும் ஹீரோவுக்கு தன் பள்ளி பருவ காதலி நினைவுக்கு வருகிறார். அவரை கண்டுபிடிக்க ஹீரோ செல்கிறார், இறுதியில் காதலியை கண்டுபிடித்து இருவரும் சேர்ந்தார்களா என்ற கதையை கொஞ்சம் வித்தியாசமாக பேரலல் யுனிவெர்ஸ் என்ற கான்சப்டில் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.
"அடியே" படத்தில் காமெடி வொர்க் அவுட்டாகி இருக்கிறது என்றே சொல்லலாம். படத்தின் முதல் பகுதி முதலில் புரியாது என்றாலும் இன்டர்வெலுக்கு பிறகு க்ளைமேக்ஸ் நெருங்கும் போது எல்லாவற்றையும் விவரிக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கு என்பதை முழு வீடியோவில் தெரிந்து கொள்ள: Click Here