சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜீ.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் ‘டியர்’!
ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜீ.வி.பிரகாஷ் இணைந்து முதன் முதலாக ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜீ.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ‘டியர்’ படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இவர்கள் இரண்டு பேரும் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்தப் படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதையே லாக்டவுனில் தான் தோன்றியது என இப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஃபேமிலி எண்டர்டைனராக உருவாகி வரும் இந்தப் படத்தில் தலைவாசல் விஜய், ரோஹினி, காளி வெங்கட், பிளாக் ஷீப் சேனல் புகழ் நந்தினி, இளவரசு ஆகியோர் நடிக்கின்றனர். டிசம்பர் மாதமே தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவு பெரும் தருவாயில் உள்ளது. மொத்தம் ஏழு பாடல்கள் உள்ள இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமாரே இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.