சினிமா
‘கார்த்தி 26’ அப்டேட் கொடுத்த ஞானவேல் ராஜா
‘கார்த்தி 26’ திரைப்படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கார்த்தி நடிக்கும் அடுத்த படம் தான் ‘கார்த்தி 26’. நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை
ஜப்பான் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்-ஐ இம்மாதம் 25ஆம் தேதி வெளியிட அப்படக்குழு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜப்பான் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி ஓரிரு மாதங்களில் ‘கார்த்தி 26’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் 8 நாட்கள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.