சினிமா
’காந்தாரா -2’ முதற்கட்ட ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவு!
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா - 2’ படத்தின் முதற்கட்ட ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியாகின் மாபெரும் சாதனை படைத்த படம் ‘காந்தாரா’. இந்தப் படம் கர்நாடகா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றி விழாவில் இந்தப் படத்தின் முன்கதையான ‘காந்தாரா பிரீக்யுவல்’ படத்தை தான் அடுத்ததாக எடுக்கவுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில், தற்போது அந்தப் படத்தின் முதற்கட்ட ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகுமெனத் தெரிகிறது. மேலும், இந்தப் படத்திற்காக நிறைய ஆய்வை மேற்கொண்டு, தரவுகளை சேகரித்து எழுதி வருகிறாராம் ரிஷப் ஷெட்டி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்தப் படத்திற்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.