சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சினிமாவில் சில படங்களை தயாரித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இதற்கு ரவீந்தர் சந்திரசேகர் பதிலடி கொடுத்தார்.
தற்போது நடிகை மகாலட்சுமியும், ரவீந்தர் சந்திரசேகரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரை கடந்த 2020ஆம் ஆண்டும் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், இதற்கான திட்ட மதிப்பு ரூ.200 கோடி எனவும், இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என போலி ஆவணங்களை காட்டி நம்ப வைத்து ரூ.16 கோடி மூதலீடு செய்ய வைத்து, வாங்கி பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்ததாக ரவீந்தர் சந்திரசேகர் வயது(39) மீது புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை சென்னையில் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோசடி வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.