சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘ரொமான்சம்’ படத்தின் இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. காலேஜில் நடக்கும் கதையாக உருவாகும் இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மெலும், இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசில் மொட்டை தலையுடன் காட்சியளிக்கவுள்ளாராம்.
இதுவரைப் பெயரிடப்படாத இந்தப் படத்தை அன்வர் ரஷீத் மற்றும் நஷ்ரியா இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை பல மொழிகளில் வெளியிட அப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஃபஹத் ஃபாசில் தமிழில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.