சினிமா
’வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியின் அடுத்த படத்தில் துலகர் சல்மான் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்சியூன் 4 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. மேலும், இந்தப் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடலாம் என அப்படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றவிருக்கும் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகத் தயாராகவுள்ளது.