சினிமா
நிறைவடைந்தது ‘Boyapatirapo' படத்தின் டப்பிங் வேலைகள்!
தெலுங்கு இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு - ராம் பொத்தினேனி இணையும் ‘Boyapatirapo' படத்தின் டப்பிங் வேலைகள் நிறைவடைந்ததாக அப்படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் இதுவரை பெயரிடப்படாத ‘Boyapatirapo' எனும் படத்தின் டப்பிங் வேலைகள் நிறைவடைந்ததாக அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படம் போயப்பட்டி ஸ்ரீனுவும் ராம் பொத்தினேனியும் இணையும் முதல் படமாகும். இந்தப் படம் வரும் அக்.20ஆம் தேதி வெளியாகிரது.
ஆக்ஷன் மசாலா படமாக உருவாகும் இந்தப் படத்தில் ஸ்ரீ லீலா ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பான் இந்தியப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.