'மத்தகம்' வெப் சீரிஸ் உருவான கதை - விளக்குகிறார் இயக்குநர் பிரசாத் முருகேசன்
"கிடாரி" திரைப்படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரசாத் முருகேசன். அவர் தற்போது இயக்கிய "மத்தகம்" வெப் சீரிஸ் ஹோட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. 5 எபிஸோடுகளாக வெளியாகியுள்ள "மத்தகம்" வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகத்தை மட்டும் வெளியிட்டுள்ள படக்குழு இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
நடிகர் அதர்வா- நடிகர் மணிகண்டன் இருவரும் எதிர் எதிர் துருவங்களாக, திருடன்-போலீஸ் கதையை மாறுபட்ட கோணத்தில் நகர்த்தி கொண்டு சென்றுள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன்.
இயக்குநர் பிரசாத் முருகேசன் குமுதம் யூட்யூப் சேனலில் "மத்தகம்" வெப் சீரிஸ் இயக்கிய அனுபவங்களை பற்றி பகிர்ந்துள்ளார். வெப் சீரிஸ் உருவான விதம், கதை தேர்வு, வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்பதை பற்றியான சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்.
முழு வீடியோவாக பார்க்க: Click Here