இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவுக்கு மிகப்பெரிய பங்காற்றிய மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். 24 படங்களை இயக்கியுள்ள அவர், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான அவர் 3 படங்களை தயாரித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக கல்லீரல் பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திரைத்துறையினரும், ரசிகர்களும் சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்