இயக்குநர் அட்லீ, நடிகர் பிரியாவை 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி மகன் பிறந்ததாக அட்லீ தனது இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.
தற்போது அவர் தனது மகனின் பெயரையும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய மகனுக்கு ’மீர்’ என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.